Skip to content Skip to footer

கொள்கைகள்

  • சென்னையையும்‌, சென்னையச்‌ சுற்றியும்‌ உருவாக்கப்படுகின்ற கட்டமைப்பு வசதிகளை தமிழகத்தின்‌ மற்ற பகுதிகளுக்கும்‌ சரிசமமாகச்‌ செயல்படுத்த வேண்டும்‌.
  • விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தினை பாதுகாக்க, தொலைநோக்குப்‌ பார்வையோடு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்‌. உடனடியாக நீர்நிலைகள்‌ மாசுபடுவதை தடுக்க வேண்டும்‌.
  • தேசிய நதிநர்‌ இணைப்பை துரிதபடுத்தி நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும்‌.
  • விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மத்தியிலும்‌, மாநிலத்திலும்‌ விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தயாரிக்க வேண்டும்‌. 100 நாள்‌ வேலைவாய்ப்புத்‌ திட்டத்தை விவசாயத்திற்குப்‌ பயன்படுத்த வேண்டும்‌.
  • தமிழகத்தில்‌ மக்கள்‌ நீதி மன்றம்‌ அமைய வலிபுறுத்துவோம்‌.
  • நம்‌ பண்பாடு மற்றும் கலாச்சாரம்‌ சீரழிவதைப்‌ பார்த்து கொண்டிராமல்‌ அவற்றைக்‌ காப்பாற்ற பாடுபடுவோம்‌.
  • மது அருந்துபவர்களை தடுத்து நிறுத்த கிராமம் கிராமமாக பிரச்சாரம்‌ செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி, அரசு மதுக்கடைகள்‌ நடத்துவதை தடுத்து நிறுத்த போராடுவோம்‌.
  • அரசியலில் நேர்மை, நாணயம்‌, உண்மை, சுயநலமின்மை ஆகியவற்றை ஊக்குவிக்க, அரசியல்‌ வேண்டாமென்று ஒதுங்குகின்ற தூய்மையான இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு அழைத்து வர வேண்டும்‌.
  • மின்பற்றாக்‌ குறையினால்‌ நலிந்து அழிந்து கொண்டிருக்கின்ற ஜவுளி. கோழிப்பண்னை, லாரித்தொழில்‌ மற்றும் என்‌ஜினியரிங்‌ தொழில்‌நுட்பம் ஆகியவற்றை காப்பற்றவும்‌, தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவும் போராடுவோம்‌.
  • அனைத்து மாவட்ட தொழிலாளர்களுக்கும்‌ வேலைவாய்ப்பளிக்கின்ற தொழிற்சாலைகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசை வலியுறுத்துவோம்‌.

வெல்க பாரதம்
வளர்க தமிழகம்
மலர்க கொங்குநாடு

Newsletter