செய்திகள்
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் மக்கள் பணியாற்றிட எனக்கு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!
தொகுதியில் வெற்றிக்கு களப்பணியாற்றிய திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி..! நன்றி..!
–அண்ணன் ஈ.ஆர். ஈஸ்வரன்
கொள்கைகள்
விவசாயம்
விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மத்தியிலும், மாநிலத்திலும் விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தயாரிக்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
நீர்வளம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க தொலைநோக்குப் பார்வையேரடு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். உடனடியாக நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
தொழில்
அனைத்து மாவட்ட தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்கின்ற தொழிற்சாலைகளை உள்ளடக்கிய, கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசை வலியுறுத்துவோம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கொங்குநாட்டான் என்று சொல்லடா!
கொள்கையுடன் வாழடா!
கொங்கு நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் போராடவும், அதே வேளையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும்,
இந்திய அரசு தமிழர்களை புறக்கணிப்பதை எதிர்த்துப் போராடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி”.
அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.
விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அரசு வழங்கிட வேண்டும்.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
நீர், காற்று மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.