வணக்கம்,
உங்களால் நான் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு பதவியேற்று இன்னை என் வாழ்வின் மறக்க முடியாத நாளாக்கிய தொகுதி மக்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பினை வழங்கிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் E.R.ஈஸ்வரன் அவர்களுக்கும்,வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்ற மசார்பற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் வெற்றிக்காக அல்லும் பகலும் உழைத்த அனைத்து கட்சி தொண்டர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், பொது நல அமைபினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது தொகுதியில் ஓர் ஆண்டில் நடைபெற்ற பணிகளை இந்த இதழின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக நாமக்கலில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்த பணி குறிப்பிடத்தக்கது. மேலும் மதிய அரசின் திட்டங்களை எந்த விதமான ஊழல்களும் இல்லாமல் மிக குறைந்த வேளையில் செயல்படுத்தியதால் மதிய அரசின் நிதி ஆண்டிற்கு 5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை உருவாக்கி கமிட்டியை நிவகிக்கும் பணியை பெற்று நமது நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு பெருமை சேர்த்துள்ளேன். நமது தொகுதி நன்மைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர் கட்சி என்று பாராமல் அன்றாடம் தொடர்புக்கொண்டு பணியாற்றி வருகிறேன்… அதே போல் நமது தொகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் அணைத்து நடவடிக்கைகளையும் வரும் காலங்களிலும் நடைபெறாமல் பார்த்து கொள்வேன். மேலும் மக்களுக்கு தேவையான மருத்துவம், கல்வி உதவிகள் மற்றும் மதிய, மாநில அரசின் உதவிகள், தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் சட்ட விரோதமான செயல்களை உடனுக்குடன் தொலைபேசி வாயிலாகவோ, இணையதள வாயிலாகவோ தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
